மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!!

மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!!

Update: 2022-07-01 05:55 GMT

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சில திட்டங்களில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தி அவை சிறப்பான முறையில் செயல்படுத்தப்படவும் உள்ளது. அந்த வகையில், சமீபத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்று மாற்றி அமைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும் என்றும், மேல்படிப்பை இடைநிற்றல் இன்றி முடிக்கும்வரை மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்து. அது மட்டுமின்றி, மாணவிகள் மற்ற கல்வி உதவித்தொகை பெற்றுவந்தாலும், இந்த உதவித்தொகையும் வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.

இது மட்டுமல்லாமல் இந்த கல்வியாண்டு முதலே அரசு பள்ளிப் மாணவிகளுக்கு ரூ. 1,000 நிதியுதவி வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் அரசு பள்ளி மாணவிகள் ரூ.1,000 உதவித்தொகை பெறுவது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து கல்லூரிகளிலும் இது தொடர்பான விண்ணப்பங்கள் பெறப்பட்டு இதுவரைக்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் ரூ. 1,000 உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை விண்ணப்பித்துள்ளனர்.

இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்றே (ஜூன் 30) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 அளிக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இன்றுடன் கால அவகாசம் முடிய இருந்த நிலையில், வரும் ஜூலை 10-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Similar News