ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு.. தமிழக அரசு அதிரடி..!

ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு.. தமிழக அரசு அதிரடி..!

Update: 2022-06-29 20:08 GMT

தமிழகத்தில், கடந்த கல்வி ஆண்டுக்கான தேர்வு முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், இந்த கல்வி ஆண்டு இடையிலேயே தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஓய்வு பெறுகின்றனர்.

இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டு பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களின் பணியை, மாணவர்களின் நலன் கருதி நடப்பு கல்வி ஆண்டு முடியும் வரை நீட்டித்து கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

Similar News