சேமிப்பு கணக்குகளை மூடுவதற்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள் !!
சேமிப்பு கணக்குகளை மூடுவதற்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள் !!
தபால் துறையின் வங்கிப் பிரிவான இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி (India Posit Payments Bank) சேமிப்புக் கணக்குகளுக்கான விதிமுறையை மாற்றியுள்ளது. இதன்படி, சேமிப்புக் கணக்குகளை மூடுவதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்கினை மூட வேண்டுமெனில், அதற்கு தனியாக 150 ரூபாய் + ஜிஎஸ்டி கட்டணமும் சேர்த்து செலுத்த வேண்டியிருக்கும். அஞ்சலகத்தின் இந்த கட்டண முறை மார்ச் 5ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. எனினும் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கே.ஓய்.சி (KYC ) இல்லாமல், ஒரு ஆண்டுக்கு மேற்பட்ட சேமிப்பு கணக்குகளுக்கு மட்டுமே இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்தக் கட்டணம் டிஜிட்டல் சேமிப்புக் கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும் என இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலமாக தொடங்கப்படும் கணக்கிற்கு ஒரு வருடத்திற்குள் கேஓய்சி சரிபார்ப்பினை செய்ய வேண்டும். அப்படி அவசரத்திற்கு ஆன்லைனில் தொடங்கும் சேமிப்பு கணக்குகளுக்கு , பலரும் கேஓய்சி அப்டேஷனை செய்வதில்லை. இதற்கிடையில் தான் அஞ்சலகம் இப்படி அறிவிப்பினை கொடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்திய அரசின் கீழ் தபால் துறை கட்டுப்பாட்டில் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் தற்போது சேமிப்புக் கணக்குகளுக்கு 1 லட்சம் ரூபாய் வரையிலான மீதத் தொகைக்கு 2.25% வட்டியும், 2 லட்சம் ரூபாய் வரையிலான மீதத் தொகைக்கு 2.5% வட்டியும் வழங்கப்பட்டு வருகிறது.
newstm.in