எகிறியது எப்சி கட்டணம்.. வாகன உரிமையாளர்கள் அவதி..!

எகிறியது எப்சி கட்டணம்.. வாகன உரிமையாளர்கள் அவதி..!

Update: 2022-04-02 19:42 GMT

நாடு முழுவதும் 15 ஆண்டுகள் பழமையான மோட்டார் வாகனங்கள் தகுதிச் சான்று (எப்சி) பெறுவதற்கான கட்டணத்தை மத்திய அரசு திடீரென உயர்த்தியுள்ளது.

இதுவரை லாரிகளுக்கான தகுதிச்சான்று கட்டணம் 800 ரூபாயாக இருந்தது. இந்நிலையில், லாரிகளுக்கான தகுதிச்சான்று கட்டணம் ரூ.13,500 மற்றும் பசுமை வரி ரூ.200 சேர்த்து ரூ.13,700 என மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

அதன்படி, 15 ஆண்டுகளுக்கு மேலான கார் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களுக்கு இதுவரை தகுதிச்சான்று கட்டணம் ரூ.600 ஆக இருந்தது. தற்போது இது ரூ.5,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட தேதியில் தகுதிச் சான்றிதழ் பெறாத வாகனங்கள் நாள் ஒன்றுக்கு ரூ.50 வீதம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறையால் வாகன உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News