தமிழகத்தை தொடர்ந்து இந்த மாநிலத்திலும் முகவகவசம் கட்டாயம்..!!

தமிழகத்தை தொடர்ந்து இந்த மாநிலத்திலும் முகவகவசம் கட்டாயம்..!!

Update: 2022-06-11 13:50 GMT

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை மேற்கொண்டார்.அதன்பின், முதலமைச்சர் முக ஸ்டாலின் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி,

  • கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
  • பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.
  • கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் பகுதிகளை கண்காணிக்க வேண்டும் என்று கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
  • இதன் மூலம் தமிழகத்தில்  முகக்கவசம் அணிவது அவசியமாகியுள்ளது. 

இந்நிலையில், கர்நாடகாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

பொது இடங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள், கல்வி நிலையங்கள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்ப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News