உலக அளவில் முன்னணி சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், மற்றும் வாட்ஸ் ஆப் ஆகிய நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டாவின் தலைமை இயக்க அதிகாரியாக இருந்தவர் ஷெரில் சாண்ட்பெர்க்.

ஒரு புத்தொழில் நிறுவனமாக அந்த நிறுவனத்தைத் தொடங்கி, அதை டிஜிட்டல் விளம்பர சாம்ராஜ்யமாக மாற்றுவதில் பக்க பலமாக இருந்தவர் ஷெரில் சாண்ட்பெர்க். முதலில் இவர் கூகுளில் சேர்ந்து 4 ஆண்டுகாலம் பணியாற்றியதும் உண்டு. தற்போது அவர் மெட்டாவில் இருந்து விலகுவது குறித்து தனது 'பேஸ்புக்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார்.

அதில், மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்குடன் 14 ஆண்டுகள் வரை பணிபுரிந்தது மரியாதையாகவும் வாழ்வின் சிறப்பாகவும் கருத்துவதாக தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், மெட்டா நிறுவனத்தில் ஷெரில் சாண்ட்பெர்க் வகித்த தலைமை இயக்க அதிகாரி என்ற பொறுப்பில் இனி மெட்டாவின் மத்திய தயாரிப்புகளின் துணைத் தலைவர் ஜேவியர் ஒலிவன்  தெடருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனத்தின் பொறுப்புகளை மாற்றுவதில் ஷெரில் சாண்ட்பெர்க் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் இருவரும் கோடைக் காலத்தில் பணியாற்றுவார்கள் என்றும் ஷெரில் சாண்ட்பெர்க் தனது தலைமை இயக்க அதிகாரி பொறுப்பில் இருந்து விலகினாலும் மெட்டா நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் தொடர்ந்து பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 
அதனைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனத்தில் “லைக்கள்” போன்ற சிறப்பு அம்சங்கள் இல்லாத தருணத்தில் இணைந்து, விளம்பர உத்திகள் முலம் நிறுவனத்தின் வருவாயை குறுகிய நேரத்தில் பலமடங்கு உயர்த்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

ஷெரில் சாண்ட்பெர்க் கணவர் கடந்த 2015-ம் ஆண்டு திடீரென இறந்து விட்டார். இந்த கோடை கோலத்தில் இவர் மறுமணம் செய்து கொண்டார். இவரது பதவி விலகல் அறிவிப்பைத் தொடர்ந்து மெட்டாவின் பங்குகள் 4 சதவீத அளவுக்கு சரிவை சந்தித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Tags: