மயங்கிவிழுந்த மனைவி.. கொலை செய்துவிட்டதாக நினைத்து கணவர் தற்கொலை !!

மயங்கிவிழுந்த மனைவி.. கொலை செய்துவிட்டதாக நினைத்து கணவர் தற்கொலை !!

Update: 2022-03-27 07:47 GMT

வாக்குவாதத்தில் தாக்கியபோது மயக்கமடைந்த மனைவி உயிரிழந்துவிட்டதாக கருதி கணவர் தற்கொலை செய்துக்கொண்ட சோகம் நடந்துள்ளது.

கடலூர் மாவட்டடம் விருத்தாசலத்தை அடுத்த கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் வீரமணி (28) - விஜயசாந்தி தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிநலையில், கடந்த 18 ஆம் தேதி வீட்டில் சமையல் செய்வதில் கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கோபமடைந்த வீரமணி தாக்கியதில் விஜயசாந்தி மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். அவர் எழுப்ப முயன்றும் விஜயசாந்தி கண்முழிக்கவில்லை. இதனால்  தான் அடித்ததில் அவர் இறந்து விட்டதாக கருதிய வீரமணி, போலீசார் மற்றும் மனைவி குடும்பத்தினருக்கு அஞ்சி சேலையால் வீட்டில் தூக்கிட்டுள்ளார்.

சிறிது நேரத்துக்கு பின்னர் தானாகவே மயக்கம் தெளிந்து எழுந்த விஜயசாந்தி, வீரமணி தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டார். பின்னர்  புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து வீரமணியின் தந்தை ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீரமணியின் மனைவி விஜயசாந்தியிடமும் விசாரணை நடத்தினர். 

newstm.in

Similar News