தூக்கில் தொங்கிய கள்ளக்காதல் ஜோடி.. பரிதவிக்கும் குழந்தைகள்..!

தூக்கில் தொங்கிய கள்ளக்காதல் ஜோடி.. பரிதவிக்கும் குழந்தைகள்..!

Update: 2022-05-10 12:27 GMT

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சரஸ்வதி. இவர், தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், சரஸ்வதிக்கு அதே பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவருடன் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். முனியாண்டிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று, வழக்கம்போல் பணிக்கு சென்றிருந்த செந்தில்குமார் மாலையில் தனது மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார்.

தொடர்ந்து தொலைபேசி அழைப்பை சரஸ்வதி எடுக்காததால் சந்தேகமடைந்த அவர், அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு தொடர்புகொண்டு தனது வீட்டிற்கு சென்று பாருங்கள் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து உறவினர்கள் நீண்ட நேரம் வீட்டின் கதவை தட்டியும், கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்து திருத்தங்கல் நகர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சரஸ்வதியும் முனியாண்டியு தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருந்தனர்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், காவல்துறையினர் உதவியுடன் உடலை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்காதலால் இரண்டு பேர் தூக்கில் தொங்கிய நிலையில், இரண்டு பேரின் குடும்பமும் குழந்தைகளும் தற்பொழுது நிற்கதியாக நிற்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News