போதையால் நடுதெருவில் குடும்பம்.. அதிகமாக மது குடித்த தொழிலாளி உயிரிழப்பு !!

போதையால் நடுதெருவில் குடும்பம்.. அதிகமாக மது குடித்த தொழிலாளி உயிரிழப்பு !!

Update: 2022-03-21 09:29 GMT

சென்னிமலை அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழந்த பரிதாபம் ஏற்பட்டுள்ளது. 
  
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே மின்னகாடு பகுதியில் மனைவி தவமணி மற்றும் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார் முருகேசன் (39). பனியன் நிறுவன தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. அதுவும் தினமும் அளவுக்கு அதிகமாக மதுகுடித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மதுபோதையில் வீட்டிற்கு சென்று வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்துள்ளார். 
 
இந்த நிலையில் வழக்கம்போல் கடந்த 19ஆம் தேதி காலையில் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற முருகேசன் அன்று இரவு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சென்னிமலை அருகே ஓட்டப்பாறை ஊராட்சிக்குட்பட்ட நெடுஞ்சுனைபாறை என்ற இடத்தில் முருகேசன் உயிரிழந்து கிடப்பதாக அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்தது.

பின்னர் முருகேசனின் மனைவி தவமணி சென்னிமலை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் முருகேசன் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் கீழே தவறி விழுந்ததில் இறந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். 


newstm.in

Similar News