2வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம்.. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..!

2வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம்.. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..!

Update: 2022-06-06 15:55 GMT

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அரசு ஊழியரான பிரேன் டேகா என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு உயிரிழந்தார். அவரது இரண்டாவது மனைவி பிரதிமா தேகா, குடும்ப ஓய்வூதியம் கோரி குவஹாத்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை எதிர்த்து, பிரேன் டேகாவின் முதல் மனைவி கோலபி தேகா மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த குவஹாத்தி உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் மேதி,  “இந்து திருமணச் சட்டத்தில் இரண்டாவது மனைவி என்ற கருத்துக்கு இடமில்லை.

அதே போல, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இரண்டாவது திருமணம் என்பது குற்றமாக கருதப்படும். அதன் அடிப்படையில் விவாகரத்து கோரலாம்.

எனவே, இந்த வழக்கில் வேறு எந்த வாய்ப்புகளும் இல்லாத நிலையில், இரண்டாவது மனைவியின் மனுவை தள்ளுபடி செய்வதோடு, முதல் மனைவி இருக்கும் போது குடும்ப ஓய்வூதியம் பெற இரண்டாவது மனைவிக்கு அதிகாரம் இல்லை” என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தார்.

Similar News