முகத்தில் காயங்களுடன் ஃபோட்டோ வெளியிட்ட பிரபல நடிகை!! காரணம் என்ன?

முகத்தில் காயங்களுடன் ஃபோட்டோ வெளியிட்ட பிரபல நடிகை!! காரணம் என்ன?

Update: 2022-05-18 17:27 GMT

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா முகத்தில் காயங்களுடன் புகைப்படம் வெளியிட்ட நிலையில், அது தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் தம்பதியினர் வாடகைத் தாய் மூலம் பெண் குழந்தை பெற்றனர். ஆனால் அந்த குழந்தைக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து 100 நாள் சிகிச்சைக்கு பிறகு குணமாகியுள்ளது.

இதையடுத்து, பிரியங்கா - நிக் ஜோனஸ் தம்பதி, தங்களது குழந்தையின் புகைப்படத்தை முதல் முறையாக சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு, 100 நாட்கள் மன வலியை அனுபவித்தோம் என உருக்கமாக பதிவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து பிரியங்கா சோப்ரா மீண்டும் ஷூட்டிங்கிற்கு செல்ல தொடங்கிவிட்டார். சைட்டடல்என்ற சயின்ஸ் பிக்ஷன் அமெரிக்க தொலைக்காட்சி தொடரை, பிரபல நடிகரான ரிச்சர்டு மேடன் உடன் இணைந்து பிரியங்கா சோப்ரா தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியங்கா சோப்ரா முகத்தில் காயங்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். உங்கள் வேலை நாட்களில் கடினமான நாட்கள் இருந்துள்ளதா? என கேப்ஷனில் குறிப்பிட்டிருந்தார்.

இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்த நிலையில், அது படப்பிடிப்பு தளத்தில் மேக்கப் உடன் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரிந்ததும் நிம்மதி அடைந்தனர்.

newstm.in

Similar News