பாலிவுட்டில் பிரபல நடிகர், நடிகைகளுக்கு கொரோனா தொற்று!!

பாலிவுட்டில் பிரபல நடிகர், நடிகைகளுக்கு கொரோனா தொற்று!!

Update: 2022-06-05 19:17 GMT

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கானுக்கு கொரோனா தொற்று உறுதியாகி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. இதனால் அம்மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஷாரூக் கானுக்கு கொரோனா தொற்று உறுதியாகி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த  ஷாருக்கானுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஷாருக்கானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், அதுகுறித்து ஷாரூக் கான் தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்-க்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கத்ரீனா ஏற்கனவே வீட்டுத் தனிமையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கத்ரீனாவின் கணவர் விக்கி கௌசலிற்கு ஐஃபா விருதுகள் விழாவில் சர்தார் உத்தம் படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட உள்ளது. தற்போது கத்ரீனாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் விருது விழாவில் அவர் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது.

newstm.in

Similar News