பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி கைது..!

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி கைது..!

Update: 2022-02-28 14:59 GMT

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி. இவரும், கிரிக்கெட்டின் சகாப்தமான டெண்டுல்கரும் பள்ளி கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை படைத்து இருந்தனர். டெண்டுல்கரின் நண்பரான இவரால் சர்வதேச போட்டிகளில் சாதிக்க முடியவில்லை.

இடது கை பேட்ஸ்மேனான வினோத் காம்ப்ளி எப்போதும் சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம். அந்த வகையில் தற்போது, மது போதையில் காரை ஓட்டிச் சென்று குடியிருப்பு வாயிலில் மோதியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்த வினோத் காம்ப்ளி, நிதானம் இழந்த நிலையில் மும்பை பாந்த்ரா சொசைட்டி பகுதியில் காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, அவரது கார் மற்றொரு கார் மீது மோதியுள்ளது.

இதுதொடர்பாக அவர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் வினோத் காம்ப்ளியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த சம்பவத்துக்கு பிறகு காம்ப்ளி தனது வளாகத்தில் உள்ள காவலாளி மற்றும் குடியிருப்பு வாசிகளுடன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News