ப்ரைட் ரைஸ் வாங்கிக் கொடுத்து பிரபல ரவுடி வெட்டி படுகொலை !!
ப்ரைட் ரைஸ் வாங்கிக் கொடுத்து பிரபல ரவுடி வெட்டி படுகொலை !!
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மதி என்கிற மதிவாணன் (26). இவர் பிரபல ரவுடியாக அப்பகுதியில் வலம்வந்துள்ளார். மதிவாணன் மீது மீஞ்சூர், சோழவரம், செங்குன்றம் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் மதிவாணன் தனது கூட்டாளிகளான அதே பகுதியை சேர்ந்த ஹேம்நாத், சரத்குமார், தனுஷ் ஆகியோருடன் சிவந்தி ஆதித்தன் நகரிலுள்ள பழைய வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார்.
அப்போது ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவர்களை சுற்றி வளைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மதிவாணன் உள்ளிட்ட 4 பேரும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். ஆனால் அக்கும்பல் ரவுடி மதிவாணனை குறி வைத்து சரமாரியாக வெட்டியது. தலை, கழுத்தில் பலத்த காயம் அடைந்து மதிவாணன் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
பின்னர் கொலை கும்பல் ஆட்டோவில் அங்கிருந்து தப்பி சென்றனர். உயிரிழந்த மதிவாணனின் கூட்டாளிகளான ஹேம்நாத், சரத்குமார், தனுஷ் ஆகிய 3 பேரும் தலை, கழுத்தில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதற்கிடையே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது கொலைசெய்துவிட்டு ஆட்டோவில் சென்ற இருவர் போலீசாரிடம் சிக்கினர். முதலில் சாதாரணமாக விசாரித்த போலீசார் ஆட்டோவில் இருந்து கத்தி, அரிவாளை பறிமுதல் செய்தபிறகு விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அப்போது, அவர்கள் ரவுடி மதிவாணனை கொலை செய்து விட்டு தப்பி வந்தது போலீசாரின் விசாரணையில் தெரிந்தது. இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோ மற்றும் நான்கு கத்திகளுடன் இருந்த இருவரையும் சோழவரம் காவல் நிலையத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள் சூர்யா, ராம்கி என்பதும் கூட்டாளிகளான பிரபாகரன் மற்றும் சீனு ஆகியோருடன் சேர்ந்து மதிவாணனை கொலை செய்ததும் தெரிய வந்தது. போலீசார் விரைந்து சென்று கொலையுண்ட மதிவாணனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயம் அடைந்த ஹேம்நாத், சரத்குமார், தனுஷ் ஆகிய 3 பேரும் சிகிச்கைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, பழிக்கு பழியாக ரவுடி மதிவாணன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதாவது, கடந்த 2020ஆம் ஆண்டு கஞ்சா மணி என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி மதிவாணன் முக்கிய குற்றவாளியாக இருந்தார். இந்த கொலைக்கு பழிக்குப்பழியாக மதிவாணன் கொலை செய்யப்பட்டு இருப்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக தப்பி ஓடிய கஞ்சா மணியின் சகோதரர் பிரபாகரன் மற்றும் சீனு ஆகியோரை தேடி வருகின்றனர்.
கொலையுண்ட மதிவாணன் இரவில் பிரபாகரன் உடன் ஒன்றாக இருந்துள்ளார். மது, பிரைட் ரைஸ் வாங்கிக் கொடுத்து அந்த கட்டிடத்தில் மதிவாணனை தங்கவைத்து இரவில் வெட்டிக்கொலை செய்துள்ளது அக்கும்பல்.
newstm.in