பிரபல தொலைக்காட்சி நடிகை தூக்கிட்டு தற்கொலை!!
பிரபல தொலைக்காட்சி நடிகை தூக்கிட்டு தற்கொலை!!
பிரபல தொலைக்காட்சி நடிகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இளம் நடிகை பல்லவி டே (25) மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா நகரின் கர்பா பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில், அவர் வீட்டில் தூக்கில் தொடங்கியபடி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். பலமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்றில் வசித்து வந்த அவர் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த பகுதியில் தற்கொலை செய்ததற்கான குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை.
அவரது உடலின் வெளியே காயம் ஏற்பட்டதற்கான அடையாளம் எதுவும் இல்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். இயற்கைக்கு முரணான மரணம் என்று வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் செய்து கொள்ளாமல் பல்லவியுடன் ஒன்றாக வசித்து வரும் சாக்னிக் சக்ரவர்த்தி என்பவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மன் மானே நா என்ற தொலைக்காட்சி தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து நடிகை பல்லவி டே பிரபலம் ஆனவர்.
நடிகை உயிரிழந்தது ரசிகர்கள் மற்றும் அவரது நண்பர்கள், திரையுலக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
newstm.in