பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் பிரபல தமிழ் நடிகை..?

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் பிரபல தமிழ் நடிகை..?

Update: 2022-06-02 15:45 GMT

தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகை சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீசன் 3 முதல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த நடிகர் நாகார்ஜுனா சீசன் 6 நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்கப்போவதில்லை என தெரிவித்து விட்டார்.


ஏற்கனவே, கடந்த 2020-ம் ஆண்டு நாகார்ஜுனா ஷூட்டிங் சென்றிருந்தபோது, நடிகை சமந்தா பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அது, ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றதால் இந்த முறை சமந்தாவை தொகுப்பாளராக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Similar News