செல்போனுக்கு தடை விதித்த பிரபல தமிழ் நடிகர்..!
செல்போனுக்கு தடை விதித்த பிரபல தமிழ் நடிகர்..!
வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்பவர் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன். ‘ஒத்த செருப்பு’ படத்தில் அவர் ஒருவர் மட்டுமே நடித்து வியக்க வைத்தார். இந்த படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.
அடுத்த முயற்சியாக, ‘இரவின் நிழல்’ என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார். ஒரே ஷாட்டில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது படத்தில் இருந்து 30 நிமிட காட்சி திரையிடப்படவுள்ளது. அந்த காட்சிகள் வெளியாகாமல் தடுக்க, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விமர்சகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஸ்மார்ட்போன் எடுத்துவர தடைவிதிக்கப்பட்டுள்ளது.