முதல்வர் ஸ்டாலின் வேடத்தில் நடிக்கிறார் பிரபல தமிழ் நடிகர்..?

முதல்வர் ஸ்டாலின் வேடத்தில் நடிக்கிறார் பிரபல தமிழ் நடிகர்..?

Update: 2022-05-14 17:07 GMT

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கையை விரைவில் சினிமாவாக எடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும், அதில் யார் நடிக்க போகிறார் என்ற விவரத்தையும் முக்கிய பிரபலம் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் தற்போது பயோபிக் வருகை அதிகரித்துள்ளது. அந்த வகையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில் சமீபத்தில் படமாக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் வாழ்க்கையை பலரும் ஒரே சமயத்தில் சினிமாவாக எடுத்தனர். எம்ஜிஆர், பெரியார், காமராஜர், பாரதியார் என பலரின் வாழ்க்கையும் சினிமாவாக எடுக்கப்பட்டு விட்டது.

அந்த வரிசையில் தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க போகிறார்களாம். இந்த தகவலை வெளியிட்டிருப்பதும், இதை படமாக எடுக்க போவதும் நடிகரும், தயாரிப்பாளரும், எம்எல்ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் தான். ஸ்டாலின் பயோபிக் எடுக்கும் வேலைகள் விரைவில் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


அதற்கான வேலைகள் மிக விரைவில் துவங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் சமுத்திரக்கனி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமுத்திரக்கனி தற்போது அஜித்தின் ஏகே 61 படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை சமுத்திரக்கனியும் உறுதி செய்துள்ளார்.

Similar News