பிரபல தமிழ் நடிகரின் தாயார் காலமானார்..!
பிரபல தமிழ் நடிகரின் தாயார் காலமானார்..!;
பிரபல நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவம்மா இன்று காலமானார். அவருக்கு வயது 84.
கடந்த 1984-ம் ஆண்டு முதல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். ரசிகர்களால் ‘ஆக்ஷன் கிங்’ என்று அழைக்கப்படும் அர்ஜுன், தென்னிந்திய மொழிகளில் 200-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்த ‘ஹீரோ’, ‘பிரெண்ட்ஷிப்’ ஆகிய படங்கள் சமீபத்தில் வெளிவந்தது. சினிமா மட்டுமின்றி சின்னத்திரை நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவம்மா.
இவர், கர்நாடக மாநிலம் மைசூருவில் பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த லட்சுமி தேவம்மா, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி லட்சுமி தேவம்மா இன்று காலமானார். அர்ஜுன் தாயார் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.