நடிகைகள் குறித்து அவதூறு, ஆபாச பேச்சு.. கைதாகிறார் பிரபல நடிகர் !!

நடிகைகள் குறித்து அவதூறு, ஆபாச பேச்சு.. கைதாகிறார் பிரபல நடிகர் !!

Update: 2022-03-26 09:43 GMT

தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து படத்தில் நடித்து இருக்கிறார். 

பின்னர் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூடியூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி வருகிறார். அதோடு இவர் நீண்ட காலமாகவே பத்திரிகையாளராகப் பணியாற்றி வருகிறார். 

சினிமா துறையில் நடக்கும் அந்தரங்க விஷயங்கள் என தொடர்ந்து, நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்களைப் பற்றி அவதூறாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து உள்ளார். அதனால் இவருக்கும் சினிமா துறையை சேர்ந்த பிரபலங்களுக்கும் இடையயே வாக்குவாதம் இருந்து கொண்டு தான் இருக்கின்றது.

எனவே இதுபோல் பேசும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி திவ்யா என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். திவ்யா என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பயில்வான் ரங்கநாதனுக்கு எதிராக புகார் அளித்துள்ளார். வீடியோ ஆதாரங்களுடன் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய திவ்யா, தொடர்ந்து பெண்கள் மீது ஆன்லைனில் இவர் தவறாக பேசி வருகிறார். நிறைய முறை இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் இப்போதுதான் முறையாக புகார் பதிவு செய்து இருக்கிறோம். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, அவரை கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.  

இதற்கு முன்பாக இணையத்தில் அவதூறாக பேசியதாக 8 பேர் மீது புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது பயில்வான் ரங்கநாதன் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  

newstm.in


 

Tags:    

Similar News