1,080 ஏக்கர் வனப்பகுதியை தத்தெடுத்த பிரபல நடிகர் !!
1,080 ஏக்கர் வனப்பகுதியை தத்தெடுத்த பிரபல நடிகர் !!
முதல்வர் கேசிஆர் பிறந்தநாளை முன்னிட்டு சுமார் 1,000 ஏக்கர் வன நிலத்தை நடிகர் நாகார்ஜுனா தத்தெடுத்துள்ளார்
நடிகர் நாகார்ஜுனா தொடர்ந்து தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார். திரைத்துறையில் சாதித்து வரும் நடிகர் நாகார்ஜுனா, அதனை தாண்டி பல்வேறு பணிகள், சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், தெலுங்கில் நடந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றுள்ளார். சிறப்பான வகையில் நிகழ்ச்சியை அவர் கொண்டு செல்கிறார் என பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், ஆயிரம் ஏக்கர் காடுகளை தத்தெடுக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.
தற்போது அவர் கூறியது போன்றே காடுகளை தத்தெடுத்து அசத்தியுள்ளார் நடிகர் நாகார்ஜுனா. அதாவது, தெலங்கானா மாநிலத்தில் மெத்சல் மாவட்டத்தில் 1,080 ஏக்கர் நிலத்தை நாகர்ஜூனா தத்தெடுத்துள்ளார். அங்கே அவரது அப்பா நாகேஷ்வர ராவ்வின் நினைவாக பூங்கா ஒன்று அமைக்கப்படவுள்ளது.
நடிகர் நாகார்ஜுனா அறிவித்தபடி இன்று பூங்காவிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது அவரது மனைவி மனைவியான நடிகை அமலா, மகன் நாக சைதன்யா, உறவினர் சுஷாந்த் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதுகுறித்த புகைப்படங்களையும் நடிகர் நாகார்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அறிவித்துள்ளார்.
அதில், தெலங்கான மாநில முதல்வர் கே.சி.ஆர்.க்கு அவர் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். தங்கள் குடும்பம் சார்பில் வனப்பகுதியை தத்தெடுத்திருப்பதாகவும் அவை தொடர்பாகவும் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
Many happy returns of the day to chief minister Kcr garu!
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) February 17, 2022
Happy to announce the adoption and laying the foundation for the ANR URBAN PARK in chengicherla forest area by the Akkineni family
🙏 to #kcr garu and @MPsantoshtrs for this opportunity #greenindiachallenge #HBDKCR pic.twitter.com/HcGZIiKm5k
newstm.in