கிரிக்கெட் விளையாடும் போது சுருண்டு விழுந்து உயிரிழந்த பிரபல நடிகர்!!

கிரிக்கெட் விளையாடும் போது சுருண்டு விழுந்து உயிரிழந்த பிரபல நடிகர்!!

Update: 2022-07-23 21:09 GMT

தொலைக்காட்சி நடிகரான தீபேஷ் பன் கிரிக்கெட் விளையாடும் போது திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் தீபேஷ் பன். இவர் இந்தி திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் கிரிக்கெட் விளையாடும் போது திடீரென சுருண்டு விழுந்துள்ளார்.

அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

நடிகர் தீபேஷ் பன் மறைவை கேட்டு சக நடிகர்களும், ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். நடிகர் தீபேஷ் பன்னுக்கு மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இதையடுத்து நடிகர் தீபேஷ் பன்னுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த தீபேஷ் பன் நண்பரும், சக நடிகருமான சார்ருல் மாலிகின் பதிவில், தீபேஷ் பன்னை எட்டு வருடங்களான எனக்குத் தெரியும். அவர் ஒரு நல்ல நடிகர் மட்டும் அல்ல. நல்ல மனிதர். அவரை இழந்துவிட்டோம் என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.


newstm.in

Similar News