தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருபவர் பிரபல நடிகை பவித்ரா லோகேஷ். இவர், சமீபத்தில் வெளியான ஆர்.ஜே.பாலாஜியின் ‘வீட்டுல விசேஷம்’ படத்திலும் நடித்துள்ளார்.

நூற்றுக்கணக்கான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள பவித்ரா, கன்னட நடிகர் சுசீந்திர பிரசாத் என்பவரை கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சுசீந்திர பிரசாத்துக்கு இது 2-வது திருமணம்.

இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் நடித்தபோது நடிகர் மகேஷ்பாபுவின் சகோதரரும், குணச்சித்திர நடிகருமான நரேஷ் உடன் பவித்ராவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

நடிகர் சங்க நடவடிக்கைகளில் நரேஷுடன் இணைந்து பணியாற்றியதால் இருவருக்கும் காதல் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே 3 பெண்களை திருமணம் செய்து ஆளுக்கு ஒரு வீட்டில் வைத்து குடித்தனம் நடத்தி வரும் 60 வயதான நரேஷுக்கு, 43 வயது பவித்ரா லோகேஷ் மீது ஏற்பட்ட ஈர்ப்பு குறித்து திரையுலகில் பல்வேறு விதமாக பேசி வந்தனர்.

நரேஷும், பவித்ரா லோகேஷும் ஜோடியாக சென்று கோவில்களில் சுவாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இருவரும் கணவன் - மனைவி போல சுற்றிவருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே 3 மனைவி இருக்கும் போது எதற்கு 4-வது மனைவி என்று கேட்டு சமூக வலைதளங்களில் நரேஷை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

நரேஷ், பவித்ரா இருவரும் முறைப்படி விவாகரத்து பெறாமல் திருமணம் செய்து கொண்டதால் தங்கள் புதிய திருமண அறிவிப்பை பகிரங்கப்படுத்தாமல் ரகசியமாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

நடிகை பவித்ராவை பொறுத்தவரை, ஏற்கனவே ஒருவருக்கு 2-வது மனைவியாக இருந்தார். தற்போது பவித்ராவுக்கு நரேஷ் 2-வது கணவராகி உள்ளார்.

Tags: