பிரபல நடிகரின் பாலியல் வழக்கு.. 3 நடிகைகள் திடீர் ராஜினாமா !!

பிரபல நடிகரின் பாலியல் வழக்கு.. 3 நடிகைகள் திடீர் ராஜினாமா !!

Update: 2022-05-05 10:39 GMT

மலையாள சினிமாவில் நடிகைக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் பெரும் புயலை கிளப்பி தற்போதுவரை வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில் முன்னணி நடிகர் ஒருவர் பாலியல் வன்கொடுமையில் சிக்கியுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல மலையாள நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஜய் பாபு. இவர் மீது இளம் நடிகை ஒருவர் கொச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், அதில், சினிமாவில் கூடுதல் வாய்ப்புகள் தருவதாக கூறி ஓட்டல், அடுக்குமாடி குடியிருப்புக்கு வரவழைத்து தன்னை விஜய் பாபு பலாத்காரம் செய்தார், என்று கூறியிருந்தார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விஜய் பாபு வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதால் அவரை கைது செய்ய முடியவில்லை. வெளிநாட்டில் இருந்தபடியே முன்ஜாமீன் பெற முயற்சி செய்து வருகிறார். அதற்குள் அவரை கைது செய்ய கொச்சி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து விஜய் பாபுவை நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்தது. இதைதொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன் மலையாள நடிகர் சங்க நிர்வாக குழு கூட்டம் நடந்தது. அதில், தான் குற்றவாளி அல்ல என நிரூபணமாகும் வரை நடிகர் சங்கத்தில் இருந்து விலகி இருப்பதாக கூறி விஜய் பாபு கடிதம் கொடுத்திருப்பதாகவும், அந்த கடிதத்தை ஏற்று கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு மலையாள நடிகர் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து நடிகர் சங்க உள் புகார் கமிட்டியில் இருந்து ராஜினாமா செய்வதாக நடிகைகள் ஸ்வேதா மேனன், மாலா பார்வதி, குக்கு பரமேஸ்வரன் ஆகியோர் அறிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

newstm.in
 
 

Tags:    

Similar News