தோல்வி முகத்தில் பிரபல நடிகரின் சகோதரி..!
தோல்வி முகத்தில் பிரபல நடிகரின் சகோதரி..!
காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள பிரபல நடிகர் சோனு சூட்டின் சகோதரி மால்விகா சூட் சச்சார், பஞ்சாப் மாநிலம் மோகா தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக களம் கண்டார்.
அவரை எதிர்த்து, ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் டாக்டர் அமந்தீப் கவுர் அரோரா போட்டியிட்டார். அகாலி தளம் கூட்டணி சார்பில் பர்ஜிந்தர் சிங் மகான் பிரார் களம் கண்டார். பாஜக சார்பில் டாக்டர் ஹர்ஜோத் கமல் போட்டியிட்டார்.
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், சோனு சூட்டின் சகோதரி மால்விகா சூட் சச்சார் பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் டாக்டர் அமந்தீப் கவுர் அரோரா முன்னிலை வகிக்கிறார்.
தேர்தலுக்கு முன்பு மால்விகா சூட் சச்சார் பேசியதாவது, “மக்கள் என்னிடம், ‘நாங்கள் உங்களுக்கு வாக்களிக்க காத்திருக்கிறோம். தேர்தலில் உங்களுக்கு வாக்களிக்க உள்ளோம்’ என்று கூறினர்.
நாங்கள் நிறைய சமூக சேவை மற்றும் சமூக பணிகளை செய்துள்ளோம். பிற வேட்பாளர்கள் இத்தகைய சமூக பணிகளை செய்யவில்லை” என்று கூறியிருந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி அவர் பின்னடைவை சந்தித்து வருகிறார்.