பிரபல நடிகை காயத்ரி கார் விபத்தில் பலி..!!

பிரபல நடிகை காயத்ரி கார் விபத்தில் பலி..!!

Update: 2022-03-21 13:38 GMT

தெலுங்கில் துணை நடிகையாக வலம் வந்த நடிகை காயத்ரி யூடியூப் மூலம் பிரபலமானார். இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார்.இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஹோலிப் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், நடிகை காயத்ரி தனது நண்பரும், தொழிலதிபருமான 25 வயதான ரோகித் என்பவருடன் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஹோலி கொண்டாட்டங்களில் பங்கேற்றார். அப்போது அவர்கள் இருவரும் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.

நிகழ்ச்சி முடிந்ததும் நள்ளிரவு நண்பர்களுடன் காரில் வீட்டுக்கு கிளம்பி உள்ளார் காயத்ரி. கட்சிபவுலி என்கிற இடத்தின் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கி கவிழ்ந்தது. இதில் காரில் வந்த நடிகை காயத்ரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருக்கு வயது 26. அவர் அதிவேகமாக காரை ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில்,  குடிபோதையில் தறிகெட்டு அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் ஏறி அங்கு தோட்ட வேலை செய்து கொண்டிருந்த மகேஸ்வரி என்ற பெண்ணின் மீது பயங்கரமாக மோதியது.இந்த விபத்தில் சம்பவ இடத்திலே மகேஸ்வரி உயிரிழந்தார். காரில் வந்தவர்கள் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

காயத்ரி உயிரிழப்புக்கு தெலுங்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Similar News