அமைச்சரானார் பிரபல நடிகை.. பட்டாசு வெடித்து ரசிகர்கள் கொண்டாட்டம்..!

அமைச்சரானார் பிரபல நடிகை.. பட்டாசு வெடித்து ரசிகர்கள் கொண்டாட்டம்..!

Update: 2022-04-12 06:05 GMT

ஆந்திராவில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து, ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றார்.

இந்த நிலையில், இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் ஆந்திர மாநில அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதில், நகரி தொகுதி எம்எல்ஏவான நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி உறுதி செய்யப்பட்டது.புதிதாக பதவி ஏற்க போகும் அமைச்சரவை விரிவாக்கத்தில் ஏற்கனவே இருந்த அமைச்சர்களில் அனுபவம் வாய்ந்த 10 பேரோடு புதிதாக 15 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இதையடுத்து, ஆந்திர அமைச்சரவையில் இருந்த 11 பேரைத் தவிர மற்றவர்கள் ராஜினாமா செய்த நிலையில், நகரி எம்எல்ஏ நடிகை ரோஜா உள்பட 14 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் பிஸ்வா பூஷன் ஹரிசந்தன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கடந்த 2004 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா தொடர்ந்து வெற்றி பெற்று 2 முறை எம்எல்ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, நகரியில் உள்ள ரோஜாவின் வீட்டின் அருகில், நடிகை ரோஜாவின் ஆதரவாளர்களும் ரசிகர்களும் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

Similar News