பிரபல நடிகைக்கு பாலியல் மிரட்டல்.. பகீர் கிளப்பும் வீடியோ !!

பிரபல நடிகைக்கு பாலியல் மிரட்டல்.. பகீர் கிளப்பும் வீடியோ !!

Update: 2022-05-09 18:40 GMT

மர்ம நபர் ஒருவர் தனது காரை மோதிவிட்டு பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்ததாக பிரபல நடிகை பரபரப்பு புகார்  தெரிவித்துள்ளார். 

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும், நடிகையுமானவர் மஹி விஜ் (40). இவர், தனது டுவிட்டர் பதிவில் கூறிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது, ஒருவரிடமிருந்து எனக்கு பாலியல் பலாத்கார மிரட்டல் வந்தது. அவர் எனது கார் மீது அவரது காரை மோதவிட்டு தவறாக நடந்துகொண்டார். சம்பவம் நடந்தபோது எனது மகள் தாராவும் காரில் இருந்தார். எனது குடும்பத்தை அச்சுறுத்தும் நபர் மீது மும்பை காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த பதிவில் தனது கார் மீது மோதிய காரின் நம்பர் பிளேட்டைக் காட்டும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இந்த பதிவை பார்த்த மும்பை போலீசார், தயவுசெய்து அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று உங்கள் புகாரை பதிவு செய்யுங்கள்,என்று பதிலளித்தது. 

இதற்கு, மஹி விஜ் தரப்பில், வொர்லி காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டது என்று ரீ-டுவிட் செய்துள்ளார். இவ்விவகாரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அதேபோல் அவரது ரசிகர்களும் இந்த அச்சுறுத்தலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 

 



newstm.in
 

Tags:    

Similar News