வேகமாக சென்று கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை..
வேகமாக சென்று கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை..
பிரபல பாலிவுட் நடிகை மலாய்கா அரோரா. இவர், மும்பைக்கு அருகிலுள்ள பன்வெல் என்ற இடத்தில் தனது ரேஞ்ச் ரோவர் காரில் சென்றப்போது விபத்தில் சிக்கினார்.
ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் விரைவுச் சாலையில் சென்ற மற்ற 2 கார்கள் மீது மோதியது. விபத்தால் அதிர்ச்சியடைந்த மலாய்காவுக்கு நெற்றி மற்றும் கண் அருகே சிறு காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவர் நவி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சில தையல்கள் போடப்பட்டுள்ளதாக மலராய்காவின் நண்பர் தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்து விசாரித்து எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும் என்று மும்பை போலீசார் தெரிவித்தனர். தற்போது நலமுடன் இருப்பதாக நடிகை மலாய்கா அரோரா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சல்மான் கானின் தம்பி அர்பாஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை மலாய்கா அரோரா. எனினும் திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து கணவரை பிரிந்தார். அதன் பிறகு தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூரை காதலித்து வந்தார். இவரையும் பிரிந்து தற்போது நடிகை மலாய்கா அரோரா தனியாக வசித்து வருகிறார்.
newstm.in