புதிதாக ஹோட்டல் தொடங்கியுள்ள பிரபல காமெடி நடிகர்!!

புதிதாக ஹோட்டல் தொடங்கியுள்ள பிரபல காமெடி நடிகர்!!

Update: 2022-06-25 07:00 GMT

மதுரை அரசு மருத்துவமனையில் நடிகர் சூரி துவங்கியுள்ள உணவகத்தை தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாராஜன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் இந்திராணி, டீன் ரத்தினவேல் மற்றும் நடிகர் சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சூரி, மருத்துவமனையில் தனது உணவகம் திறக்கப்பட காரணம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்தான் எனக்கூறி அவருக்கு நன்றி தெரிவித்தார்.

படங்கள் குறித்து பேசிய அவர், விடுதலை படம் பெரும்பகுதி நிறைவடைந்து விட்டது. படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெரும். சமீபத்தில் ரிலீஸான படங்கள் பெற்ற அதே வெற்றியையும், மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் அளிக்கும்.

இயக்குநர் வெற்றிமாறன் மிகவும் மெனக்கெட்டு உள்ளார். விடுதலை படத்தில் நான் இருப்பதே எனக்கு பெருமையாக உள்ளது. விஜய் சேதுபதியும் படத்தில் இருப்பதால் இதற்கு தனி அந்தஸ்து கிடைத்து விட்டது. இந்தியாவிலேயே முக்கியமான படமாக விடுதலை இருக்கும் என்றார்.

விஷ்ணு விஷால் தந்தை மீதான பண மோசடி வழக்கில் தன் மீது குற்றமில்லை என காவல்துறை விசாரணையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, குற்றத்தை நிரூபிக்க தான் நீதிமன்றமும், காவல்துறையும் உள்ளது.

தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் அது. அவ்வளவு எளிதாக யாரும் எதையும், சொல்லிவிட்டு தப்பிக்க முடியாது. இறைவன் இருக்கிறான். இறைவனுக்கு இணையாக நீதிமன்றத்தை நினைக்கிறேன் என தெரிவித்தார்.

newstm.in

Similar News