பிரபல கிரிக்கெட் வீரர் காலமானார்.. வீரர்கள், ரசிகர்கள் அதிர்ச்சி.. இரங்கல் !!

பிரபல கிரிக்கெட் வீரர் காலமானார்.. வீரர்கள், ரசிகர்கள் அதிர்ச்சி.. இரங்கல் !!

Update: 2022-03-04 09:30 GMT

ஆஸ்திரேலிய நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ராட் மார்ஷ் உடல்நலக்குறைவால் காலமானார்.
  
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராட் மார்ஷ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 74. கடந்த வாரம் குயின்ஸ்லாந்தில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு அடிலெய்டு மருத்துவமனையில் மார்ஷ் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், ராட் மார்ஷ் இன்று (வெள்ளிக்கிழமை) காலை காலமானார். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரராக ராட் மார்ஷ் விளங்கினார். டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரும், இடது கை பேட்ஸ்மேனுமான ராட் மார்ஷ், 1970 மற்றும் 1984 க்கு இடையில் ஆஸ்திரேலியாவுக்காக 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 355 பேரை ஆட்டமிழக்கச் செய்தார். அந்த நேரத்தில் அது ஒரு உலக சாதனை ஆகும். மேலும் ராட் மார்ஷ் மூன்று டெஸ்ட் சதங்களைப் பதிவு செய்தார்.

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், வர்ணையாளராக தனது கிரிக்கெட் பணியினை தொடர்ந்தார். இந்த நிலையில் அவர் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கிரிக்கெட் முன்னாள், தற்போதைய வீரர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Tags:    

Similar News