பிரபல திரைப்பட இயக்குநர் கைது.. காரணம் என்ன தெரியுமா..?
பிரபல திரைப்பட இயக்குநர் கைது.. காரணம் என்ன தெரியுமா..?
தமிழ்த் திரைப்பட இயக்குநரும், தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளருமான கௌதமனை தூத்துக்குடியில் விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், குறிஞ்சாக்குளம் காந்தாரியம்மன் கோயில் வழிபாட்டு உரிமை போராட்டத்தில் உயிரிழந்த நான்கு பேருக்கு நடுகல் வழிபாடு செய்யவும், காந்தாரியம்மன் சிலை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ப்பதற்காகவும், தமிழ் பேரரசு கட்சியின் பொதுசெயலாளரும், திரைப்பட இயக்குநருமான கௌதமன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார்.
இதனிடையே, அந்த நிகழ்ச்சியில் கௌதமன் பங்கேற்காமல் இருக்கும் வகையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து கௌதமனை காவல் துறையினர் கைது செய்தனர்.