விசிக பிரமுகர் வெட்டிக் கொலை.. ராணிப்பேட்டையில் பரபரப்பு..!
விசிக பிரமுகர் வெட்டிக் கொலை.. ராணிப்பேட்டையில் பரபரப்பு..!
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மழையூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (36). விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகரான இவர் ராணிப்பேட்டை நகராட்சி துணைத் தலைவர் ரமேஷ் கர்ணாவின் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு வீட்டில் இருந்து செய்யாத்து வண்ணான் சுடுகாடு அருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்றார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த அடையாளம் தெரியாத நபர்கள் பார்த்திபனை கை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.
இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து கலவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ராணிப்பேட்டை டி.எஸ்.பி. பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக பார்த்திபன் கொலை செய்யப்பட்டாரா, அல்லது வேறு ஏதாவது காரணமா..? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.