பிரபல சாமியார் பாலியல் தொல்லை.. வெளிநாட்டு சிஷ்யை புகார்..!

பிரபல சாமியார் பாலியல் தொல்லை.. வெளிநாட்டு சிஷ்யை புகார்..!

Update: 2022-03-24 18:00 GMT

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள பிடதியில் ஆசிரமம் அமைத்து இருந்த நித்தியானந்தா, பாலியல் புகாரில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

ஜாமீனில் வெளிவந்த அவர், தற்போது அடையாளம் தெரியாத, கைலாசா' என்ற தானே பெயரிட்டுள்ள நாடு ஒன்றில் தலைமறைவாக இருந்தபடியே இணையதளங்களில் உரையாற்றி வருகிறார்.

இந்நிலையில், சாரா லாண்டரி என்ற வெளிநாட்டு பெண், பெங்களூருவில் உள்ள பிடதி போலீசாருக்கு மின்னஞ்சல் மூலம் புகார் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், “கைலாசா என்ற நாட்டில் நித்தியானந்தாவும், அவரது சீடர்களும் அங்குள்ள பெண்களை அடித்து துன்புறுத்தி பாலியல் தொந்தரவு அளிக்கின்றனர். எனக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்தார்” எனக் கூறியுள்ளார்.

அதைப் பார்த்த போலீசார், ‘இது போன்ற மின்னஞ்சல் புகார்களை ஏற்க முடியாது. அதனால், நீங்கள் எந்த பயமும் இல்லாமல் இந்தியாவின் ஏதாவது ஒரு காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளியுங்கள்' என பதில் அனுப்பியுள்ளனர்.

Similar News