பாடல் பாடும்போதே மேடையில் மயங்கி விழுந்து உயிரிழந்த பிரபல பாடகர் !!
பாடல் பாடும்போதே மேடையில் மயங்கி விழுந்து உயிரிழந்த பிரபல பாடகர் !!
பிரபல பின்னணிப் பாடகர் எடவா பஷீர் மேடையில் பாடிக்கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளர் கேஜே ஜாய் இசையமைத்த ரகு வம்சம் எனும் படத்தில் இடம்பெற்ற ‘அழித்திரா மரக்கல்’ எனும் பாடல் மூலமாக திரைத்துறையில் பின்னணிப் பாடகராக அறிமுகம் ஆனவர் எடவா பஷீர்(78). மலையாளத்தில் பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ள இவர் இசைத்துறையில் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், கேரளாவின் ஆலப்புழாவில் ப்ளூ டயமண்ட் இசைக்குழுவின் பொன்விழா கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற எடவா பஷீர் மேடையில் பாடல்களை பாடினார்.
எடவா பஷீர் பாடல் ஒன்றை பாடிக் கொண்டிருந்தபோது திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்தார். இதைக்கண்டு அங்கிருந்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் உடனிருந்த கலைஞர்கள் அனைவரும் சேர்ந்து எடவா பஷீரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, எடவா பஷீர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
பாடகர் எவடா பஷீர் உயிரிழந்த சம்பவம் மலையாள திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், பலர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ഗാനമേളയിൽ പാടവേ കുഴഞ്ഞ് വീണ് ഇടവ ബഷീർ അന്തരിച്ചു | Edava Basheer #KeralaNews #EdavaBasheer #ZeeMalayalamNews pic.twitter.com/ZoIGj4Iwg6
— Zee Malayalam News (@ZeeMalayalam) May 29, 2022
newstm.in