ரசிகர்கள் வியப்பு.. ஆஸ்கர் விருதுகளை குவிக்கும் 'டியூன்' !!

ரசிகர்கள் வியப்பு.. ஆஸ்கர் விருதுகளை குவிக்கும் 'டியூன்' !!

Update: 2022-02-08 20:30 GMT

வார்னர் பிரோஸ் பிக்சர்ஸ் வெளியீட்டில் கடந்த ஆண்டு திரைக்கு வந்த படம் டியூன் (dune ). டெனிஸ் வில்லிநியூவ் இயக்கத்தில் டிமோதீ சலாமெட், ரெபேக்கா ஃபெர்கியூசன், ஆஸ்கர் ஐசாக், ஜோஷ் பிரோலின், ஸ்டெல்லன் ஸ்கார்ஷ்கார்ட், தேவ் பவுதிஸ்தா உள்ளிட்ட பலர் டியூன் படத்தில் நடித்துள்ளனர். 

இப்படம் 1965ல் வெளியான புகழ்பெற்ற ஃபிரான்க் ஹெர்பெர்ட் எழுதிய நாவல் ’டியூன்’ நாவலை தழுவி எடுக்கப்பட்டப் படம். ஒரே லைனில் சொல்லிவிடலாம் படத்தின் கதையை 'கிரகங்களுக்கு இடையே நடக்கும் போர்'. ஆனால் இரண்டரை மணிநேரம் நம்மை ஆச்சரியத்தின் உச்சத்தில் அமர வைத்து விடுகிறார் இயக்குநர் டெனிஸ் வில்லிநியூவ்.

ஸ்பைஸ் என்னும் ஒரு மூலப்பொருள் கிடைக்கும் பாலைவன கிரகம். இந்த ஸ்பைஸ் மூலப்பொருளைக் கொண்டுதான் கிரகங்களுக்கு கிரகம் பயணம் செய்யமுடியும். எரிபொருளாக மட்டும் இல்லாமல், அந்த ஸ்பைஸ் மூலம் ஏகப்பட்ட பயன்கள் உயிரினங்களுக்குக் கிடைக்கும். இந்த ஸ்பைஸ்க்காக அட்ரேய்ட்ஸ், மற்றும் அராக்கிஸ் இரு கிரக வாசிகளுக்கு இடையே நடக்கும் போர்தான் டியூன் படக் கதை. 

இதற்கிடையில் மணல் வோர்ம் எனப்படும் புழு. மணலில் உண்டாகும் அதிர்வலைகளைக் கொண்டு அதன் பாதையில் இருக்கும் அத்தனையையும் விழுங்கிவிடுகிறது. 90டிகிரி செல்சியஸ் வெப்பம் கொண்ட பாலைவனம், மனிதர்களின் நீர் சக்தியை உரியும் அதற்கிடையில் போர் மற்றும், புழு என இரு கூட்டமும் அடித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் ஆள நினைக்கின்றனர். ஹீரோவாக டிமோத்தி சலாமட்.25 வயதான டிமோத்திக்கு படத்தில் டீன் பருவ பால் அட்ரேடிஸ் கேரக்டர்.  

கிரேய்க் ஃபிரேசர் ஒளிப்பதிவு மற்றும் ஹான்ஸ் ஸிம்மர் பின்னணி இசையில் 3டி யில் நம் கண்களுக்கு விஸ்வரூப விருந்து வைக்கிறது. ஒவ்வொரு படத்திற்கும் அறிவியல் டெக்னாலஜி, விஷுவல், பால்வழி அண்டம், மாஸ் மேக்கிங் என ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் டெனிஸ் இந்தப் படத்தில் கண்ணுக்கெட்டின தூரம் பாலைவனத்தின் பிரம்மாண்டம் , அதில் நடக்கும் யுத்தம் என விஷுவல் விருந்து படைத்திருக்கிறார். 

நிச்சயம் படத்தின் டெக்னிக்கல் மேக்கிங்கிற்காகவே அடுத்த வருட ஆஸ்கர் பட்டியலில் கணிசமான விருதுகளை பெறும் என்று அப்போதே திரைவிமர்சகர்களால் கூறப்பட்டது.  

அந்த வகையில், ஆஸ்கர் விருதுக்கு டியூன் திரைப்படம் தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகி ரசிர்களை குஷி படுத்தியுள்ளது. ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியுள்ள பட்டியல் வெளியாகி வருகிறது. இதில் குறிப்பாக டியுன் திரைப்படம், காஸ்டியூம், டிசன், பின்னணி இசை, சவுண்ட், அடாப்டட் ஸ்க்ரீன்பிளே, எடிட்டிங், மேக் அப் ஆகிய விருதுக்கு தேர்வாகியுள்ளது. இதனிடையே, சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் போன்ற விருதுக்கான இறுப்பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது. 


newstm.in

Tags:    

Similar News