கே.ஜி.எஃப் -2 படத்தை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!!

கே.ஜி.எஃப் -2 படத்தை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!!

Update: 2022-04-14 09:05 GMT

இன்று வெளியான கே.ஜி.எஃப் -2 திரைப்படத்தை அனைத்து பகுதிகளிலும் உள்ள ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

யாஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான கே.ஜி.எஃப் படத்தின் முதல்பாகம் இந்திய அளவில் பிரமாண்ட வரவேற்பை பெற்றது.

இதன் அடுத்த பாகம், 2020இல் வெளியாக வேண்டியிருந்த நிலையில் கொரோனா காரணமாக வெளியீடு தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு இன்று உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான திரைகளில் வெளியாகியுள்ளது.

இன்று காலை வெளியான கே.ஜி.எஃப் -2 திரைப்படம் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது. கே.ஜி.எஃப் -2 பாசிடிவான ரிவ்யூவை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்தப் படம் தமிழ்நாட்டிலேயே குறைந்தது ரூ. 100 கோடி வசூலிக்க வாய்ப்புள்ளதாக சினிமா வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.


படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருப்பதாக முதற்கட்ட விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.  இதனால், படக்குழுவினரும், படம் பார்க்கவிருக்கும் ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்

newstm.in

Similar News