பிரபல பாடகருக்காக ரசிகர்கள் கண்ணீர் மல்க பிரார்த்தனை!!
பிரபல பாடகருக்காக ரசிகர்கள் கண்ணீர் மல்க பிரார்த்தனை!!
பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால் தனது முகத்தின் ஒருபகுதி செயலிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜஸ்டின் பீபர் இன்ஸ்டாகிராமில் மூன்று நிமிட வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 28 வயதாகும் பீபர் ராம்சே ஹன்ட் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார், இந்த வைரஸானது அவரது முக நரம்புகளை தாக்கி ஒற்றைப் பக்க தசைகளை செயலிழக்க செய்துள்ளது.
இதனால் எனது ஒற்றைப் பக்க காது மற்றும் முக தசைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒருபக்க கண் இமைக்கவில்லை, ஒரு பக்கத்தால் சிரிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய ஜஸ்டின் பீபர், சரியாகிவிடுவேன் என உறுதியுடன் இருப்பதாகவும், நீங்கள் இதனை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன், நான் இந்த நேரத்தை ஓய்வெடுக்க பயன்படுத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் முகப் பயிற்சிகள் செய்வதாகவும்,விரைவில் இதில் இருந்து குணமடைவேன் என்றும், ஆனால் இதற்கு எவ்வளவு நேரம் ஆகப்போகிறது என்று தெரியவில்லை என்றும் ஜஸ்டின் பீபர் தெரிவித்துள்ளார்.
தற்போது ஜஸ்டின் பீபர் அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் வட அமெரிக்காவில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
newstm.in