தமிழகம் முழுவதும் மீண்டும் கட்டணம் உயர்வு?

தமிழகம் முழுவதும் மீண்டும் கட்டணம் உயர்வு?

Update: 2022-06-29 12:01 GMT

கொரோனா தொற்று காரணமாக சுமார் இரண்டு ஆண்களுக்கு பிறகு பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட தொடங்கியுள்ளது. கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை எடுத்தன. கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் பலரும் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் இருந்தனர்.

ஆன்லைன் மூலம்  பாடம் நடத்திவிட்டு தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்ததாகவும் அப்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் தற்போது வழக்கம்போல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி கண்டனம் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசின் கட்டண நிர்ணய குழு அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண நிர்ணயத்தால் தனியார் பள்ளிகளின் கட்டணம் பத்து சதவிகிதம் முதல் இருபது சதவிகிதம் வரை உயர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புதிய கட்டணம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

newstm.in

Similar News