பெற்ற மகனின் தலையில் பெட்ரோல் ஊற்றி எரித்த தந்தை!! VIDEO

பெற்ற மகனின் தலையில் பெட்ரோல் ஊற்றி எரித்த தந்தை!! VIDEO

Update: 2022-04-08 06:30 GMT

12 ஆயிரம் பணம் தொலைத்த காரணத்திற்காக தந்தையே பெற்ற மகன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரில் டி.ஜே.ஹள்ளி ஆசாத் நகர் பகுதியை சேர்ந்த சுரேந்திரா என்பவர் கடந்த வாரம் 12 ஆயிரம் ரூபாய் பணத்தை தொலைத்து விட்டார்.

இதனால் அவருக்கும், அவரது மகன் அர்பித்துக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடந்துள்ளது. இந்நிலையில்  பணத்தைக் கேட்டு தந்தை சுரேந்திரா மீண்டும் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ஆத்திரத்தில் இருந்த சுரேந்திரா, வீட்டில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து மகன் தலை மீது ஊற்றி பட்டப்பகலில் தீ வைத்தார். அலறி அடித்து ஓடிய அர்பித்தை அப்பகுதி மக்கள் மீட்டு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் தீக்காயங்களுடன் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அர்பித்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக சாம்ராஜ்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து சுரேந்திராவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

*{padding:0;margin:0;overflow:hidden}html,body{height:100%}img,span{position:absolute;width:100%;top:0;bottom:0;margin:auto}span{height:1.5em;text-align:center;font:48px/1.5 sans-serif;color:white;text-shadow:0 0 0.5em black} .youtube_play{background: red; border-radius: 50% / 16%; color: #FFFFFF; font-size: 1em; margin: 20px auto; padding: 0; position: relative; text-align: center; text-indent: 0.1em; transition: all 150ms ease-out; width: 68px; height: 45px;}.youtube_play:before{background: inherit; border-radius: 5% / 50%; bottom: 9%; content: ""; left: 0; position: absolute; right: 0; top: 9%;}.youtube_play:after{border-style: solid; border-width: 1em 0 1em 1.732em; border-color: transparent transparent transparent rgba(255, 255, 255, 0.75); content: ""; font-size: 15px; height: 0; margin: -1em 0 0 -1em; top: 50%; position: absolute; width: 0;}

" data-style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" data-width="560">Full View

ரூ.12 ஆயிரம் பணத்தை தொலைத்த காரணத்திற்காக தந்தையே பெற்ற மகன் மீது பெட்ரோல் வீசி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Similar News