அச்சம் வேண்டாம்.. இந்தியாவில் ஒமைக்ரான் XE தொற்று இல்லை: மத்திய அரசு
அச்சம் வேண்டாம்.. இந்தியாவில் ஒமைக்ரான் XE தொற்று இல்லை: மத்திய அரசு
ஒமைக்ரானின் பிஏ.2 துணை மாறுபாட்டை விட எக்ஸ்இ (XE) எனப்படும் கொரோனா வைரஸின் புதிய திரிபானது, பத்து சதவீதம் அதிகமாக பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது ஜனவரி 19 அன்று இங்கிலாந்தில் முதன்முதலாக கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், இந்தியாவில் மும்பையிலும் ஒருவருக்கு இருப்பதாக மும்பை மாகராட்சி கூறியதாக தகவல் வெளியானது.
ஆனால், மும்பையில் புதிய வகை XE என்ற கொரோனா கண்டறியப்படவில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. XE என்ற கொரோனாவால் பாதித்ததாக கருதப்பட்டவரின் மாதிரியை ஆய்வு செய்ததில் அது XE வகை கொரோனாவுடன் ஒத்துப்போகவில்லை எனவும், XE இருப்பதாக கூறப்பட்ட 50 வயது பெண் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளார் எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மேலும்,தென்னாப்பிரிக்காவில் இருந்து பிப்ரவரி 10 ஆம் தேதி நாடு திரும்பிய மும்பையைச் சேர்ந்த அப்பெண்ணுக்கு XE வகை கொரோனாவின் அறிகுறிகளோ, இணை நோய்களோ இல்லை எனவும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. எனவே மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி,டெல்டா மற்றும் ஒமைக்ரான் வகை கொரோனாவை விட 10 மடங்கு வேகமாகப் பரவும் XE வகை கொரோனா பிரிட்டன் உட்பட சில நாடுகளில் கண்டறியப்பட்டது. அங்கு தற்போதும் பரவி வருகிறது.
newstm.in