கல்லூரி மாணவர்களுடன் ஸ்டெப் போட்டு பெண் கலெக்டர் அசத்தல்..!
கல்லூரி மாணவர்களுடன் ஸ்டெப் போட்டு பெண் கலெக்டர் அசத்தல்..!
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டராக இருப்பவர் திவ்யா எஸ்.ஐயர். இவர், எம்.ஜி.பல்கலைக்கழகத்தில் நடந்த இளைஞர் திருவிழாவில் கலந்து கொண்டார்.
அப்போது, திடீரென அவர் பாடல் ஒன்றுக்கு மாணவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடினார். ஆடுவதற்கு பயிற்சி எதுவும் எடுக்காமல், மற்ற மாணவர்களுடன் சேர்ந்து ஸ்டெப் போட்டு ஆடியது மாணவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதுபற்றி கலெக்டர் திவ்யா கூறும்போது, “இந்த நடனம், எனது இளமைக்கால கல்லூரி விழா நாட்களுக்கு என்னை கொண்டு சென்றது. எனது பெற்றோர் மற்றும் மகன் ஆகியோரும் இங்கே உள்ளனர்.
எனது பெற்றோர் இருந்தது, என்னுடைய இளமைக்கால கல்லூரி திருவிழா நாட்களை எனக்கு நினைவுபடுத்தியது. மாணவர்கள் அனைவரும் உற்சாகமுடன் நடனம் ஆடினர். அதில், என்னை நான் இணைத்துக் கொண்டேன்” என்று அவர் தெரிவித்தார்.