இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு !!
இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு !!
புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 26ஆம் தேதியன்று இரவு பூச்சொரிதலுடன் தொடங்கியது.
தொடர்ந்து அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வந்தனர். இந்த நிலையில், வருகிற ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு தொடர்ந்து திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர்கள் நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதனை தொடர்ந்து 11ஆம் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார். நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in