வண்டலூர் பூங்கா போறீங்களா? முக்கிய அறிவிப்பு!!
வண்டலூர் பூங்கா போறீங்களா? முக்கிய அறிவிப்பு!!
வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை மதியம் ஒரு மணிக்கு பிறகே திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொது மக்கள் மட்டுமின்றி சென்னை வரக்கூடிய அனைவருமே சுற்றுலா செல்லக்கூடிய இடமாக உள்ளது.
வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் அதிக அளவிலான பொதுமக்கள் வருகின்றனர். தொடர் விடுமுறை மற்றும் தீபாவளி, கிறி்ஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் தினங்களில் உள்ளிட்ட பண்டிகை தினங்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை மதியம் 1 மணி வரை மூடப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பூங்கா நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிர்வாக காரணங்களுக்காக அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாளை மதியம் 1 மணி வரை பார்வையாளர்களுக்கு மூடப்படுகின்றது. மதியம் 1.00 மணிக்கு பிறகு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in