தெரிந்து கொள்ளுங்கள்.. மார்ச் மாதத்தில் வங்கிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை !
தெரிந்து கொள்ளுங்கள்.. மார்ச் மாதத்தில் வங்கிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை !
நடப்பு நிதியாண்டின் கடைசி மாதம் தான் மார்ச். இந்த சமயத்தில் ஏராளமான கணக்கு, வழக்குகளை முடிக்க வேண்டிய கடமை இருக்கும். ஆனால், மார்ச் மாதத்தில் நீங்கள் வங்கிகளுக்கு செல்ல திட்டமிடும் முன்பாக முக்கியமான விஷயம் ஒன்றை மனதில் கொள்ளுங்கள். அதாவது, அடுத்த மாதத்தில் 13 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறையில் இருக்கும்.
மார்ச் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை என்பது குறித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த நாட்களில் ஆன்லைன் பேங்கிங் சேவைகள் அனைத்தும் செயல்படும் என்பது சற்று ஆறுதலான விஷயம்.
அதன்படி, மார்ச் மாதத்தில் மொத்தம் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. எஞ்சியுள்ள நாட்கள் அனைத்தும் வார இறுதி விடுமுறை ஆகும். எனினும், அனைத்து மாநிலங்களிலும் அல்லது அனைத்து பிராந்தியத்திலும் 13 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்காது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
விடுமுறை நாட்களின் பட்டியல்
மகா சிவராத்திரி - மார்ச் 1
லோசர் - மார்ச் 3
சக்பார் குட் - மார்ச் 4
ஹோலிகா டஹான் - மார்ச் 17
ஹோலி பண்டிகை - மார்ச் 18
ஹோலி அல்லது யசோங் 2ஆம் நாள் - மார்ச் 19
பீகார் திவாஸ் - மார்ச் 2
விடுமுறை பட்டியலில் உள்ள நாட்களில், உங்கள் மாநிலம் அல்லது பகுதி சார்ந்த விடுமுறையாக அது வருகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள பண்டிகை நாட்கள் மட்டுமல்லாமல், வார இறுதி நாட்களில் வரும் விடுமுறைகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்
ஞாயிறு - மார்ச் 6
இரண்டாம் சனிக்கிழமை - மார்ச் 12
ஞாயிறு - மார்ச் 13
ஞாயிறு - மார்ச் 20
நான்காம் சனிக்கிழமை - மார்ச் 26
ஞாயிறு - மார்ச் 27
விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடுகிறது என்பதையும், அனைத்து வங்கி நிறுவனங்களும் ஒரே மாதிரியான விடுமுறையை கடைப்பிடிப்பதில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
newstm.in