உடனே இந்த வேலைய முடிங்க.. இல்லாட்டி, உங்க ரேஷன் கார்டு செல்லாது..!

உடனே இந்த வேலைய முடிங்க.. இல்லாட்டி, உங்க ரேஷன் கார்டு செல்லாது..!

Update: 2022-05-18 14:23 GMT

புலம்பெயர்ந்து வாழும் மக்கள் அனைவரும் பயன்பெறும் விதமாக ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அதன்படி, நம்மிடமுள்ள ரேஷன் கார்டை வைத்து எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

ரேஷன் கார்டு விஷயத்தில் நிறைய விதிமுறைகளும் சலுகைகளும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. அதேபோல், ரேஷன் கார்டுகளில் மோசடிகள் நடைபெறாமல் இருக்க அதற்கான விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து பயனாளிகளும் தங்களது ஆதார் கார்டை அதனுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டது. கடைசியாக வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 2022 ஜூன் 30-ம் தேதிக்குள் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும்.

ஆதார் அமைப்பின் UIDAI வெப்சைட்டில் நீங்களே ஆதாரை ரேஷன் கார்டுடன் இணைக்கலாம். uidai.gov.in. என்ற வெப்சைட்டில் சென்று 'Start Now' என்ற வசதியை கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பின்னர் உங்களுடைய முகவரி, மாவட்டம் - மாநிலத்தின் பெயரை பதிவிட வேண்டும். அதன் பின்னர் 'Ration Card Benefit' என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, ஆதார் நம்பர், ரேஷன் கார்டு நம்பர், மின்னஞ்சல் முகவரி, செல்போன் நம்பர் போன்ற விவரங்களை பதிவிட வேண்டும். பதிவிட்ட பிறகு செல்போன் நம்பருக்கு ஓடிபி அனுப்பப்படும். அதைப் பதிவிட்டால் போதும்.

ஆதார் கார்டு சரிபார்க்கப் பட்டதற்கான தகவல் SMS மூலமாக உங்களுடைய செல்போன் நம்பருக்கு அனுப்பப்படும். ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பது மிகவும் அவசியமாகும்.

ஒருவேளை நீங்களும் உங்களுடைய ரேஷன் கார்டில் ஆதாரை இணைக்காமல் இருந்தால் உடனடியாக இணைப்பது நல்லது. அப்படி இணைக்காவிட்டால் ரேஷன் கார்டின் பயன்கள் உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். எனவே உடனடியாக இணைக்கும்படி அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Similar News