#BREAKING:- திருவிழாவில் தீ விபத்து.. பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்..!
#BREAKING:- திருவிழாவில் தீ விபத்து.. பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்..!
தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூரில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை.
இந்நிலையில், இந்த ஆண்டு ஆனித் திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ம் நாள் திருவிழாவின் போது அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளிய தெப்ப தேரோட்டம் நடைபெற இருந்தது.
தெப்ப தேரோட்டத்தை காண சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். விழாவையொட்டி சுமார் 9.30 மணி அளவில் கோவில் தென்புறத்தில் பட்டாசு வெடித்த போது அதிலிருந்து சிதறிய தீப்பொறி, கோவில் முன்பு போடப்பட்டிருந்த அலங்கார பந்தலில் விழுந்தது.
இதையடுத்து, அலங்கார பந்தல் மளமளவென எரிந்தது. இதை பார்த்த பக்தர்கள் மற்றும் பெண்கள் கைக்குழந்தையுடன் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வாசுதேவநல்லூர் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து உடனடியாக தீயை அணைத்தனர்.
இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.