முதல் பெண் வெளியுறவுச் செயலர் மேடலின் காலமானார் !!
முதல் பெண் வெளியுறவுச் செயலர் மேடலின் காலமானார் !!
அமெரிக்காவின் முதல் பெண் வெளியுறவுச் செயலர் மேடலின் ஆல்பிரைட் புற்றுநோயால் உயிரிழந்தார். அவருக்கு வயது 84.
அமெரிக்க அதிபராக பில் கிளிண்டன் இருந்த போது 1996ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளராக மேடலின் ஆல்பிரைட்டை நியமனம் செய்யப்பட்டார். இதன்மூலம் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளராக பொறுப்பேற்ற முதல் பெண் என்ற பெருமையை மேடலின் பெற்றார்.
பில் கிளிண்டன் ஆட்சியில் 2001ம் ஆண்டுவரை அந்த பதவியை அவர் வகித்து வந்தார். இவர், நேட்டோவின் விரிவாக்கம் மற்றும் கொசோவோவில் ராணுவத் தலையீட்டை ஊக்குவித்தார். பதவி ஓய்வுக்கு பின்னர் அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் ஆட்சிமுறை குறித்து மேடலின் மிக கடுமையாக விமர்சித்து வந்தார்.
பின்னர் அதிபர் தேர்தலில் போட்டியிட முயன்றார். ஆனால், செக்கோஸ்லோவாக்கியாவை பூர்வீகமாகக் கொண்டதால், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. 2012ஆம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, மேடலின் ஆல்பிரைட்டுக்கு அமெரிக்காவின் உயரிய விருதான சுதந்திரப் பதக்கத்தை வழங்கி கவுரவித்தார்.
மேலும் பல பெருமைகளை கொண்ட மேடலின் ஆல்பிரைட் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். இதுகுறித்து அவருடைய குடும்பத்தினர் வெளியிட்ட ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்காவின் 64 வது வெளியுறவுச் செயலரும் அந்த பதவி வகித்த முதல் பெண்ணுமான மேடலின் ஆல்பிரைட் புற்றுநோயின் காரணமாக உயிரிழந்தார். அவர் குடும்பம் மற்றும் நண்பர்களால் சூழப்பட்டுள்ளார். நாங்கள் ஒரு அன்பான தாய், பாட்டி, சகோதரி, அத்தை மற்றும் நண்பரை இழந்துவிட்டோம், என்று தெரிவித்துள்ளனர்.
Below is a statement from the family of @Madeleine: pic.twitter.com/C7Xt0EN5c9
— Madeleine Albright (@madeleine) March 23, 2022
newstm.in