கேரளாவில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி ...!!
கேரளாவில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி ...!!
கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் குரங்கு அம்மையும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை பரவி வருகிறது. 55-க்கும் மேற்பட்ட நாடுகளில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த நோய்க்கு ஆளாகி உள்ளனர்.
இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கடந்த 12-ம் தேதி கேரளா திரும்பிய ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறி தென்பட்டுள்ளது. சம்பந்தபட்ட நபருக்கு சுகாதரத்துறையினர் பரிசோதனை செய்தனர். அந்த நபரின் மாதிரி முடிவுகள் புனே வைராலஜி ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
இந்நிலையில் அவருக்கு குரங்கு அம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவரின் உடல் நிலை சீராக உள்ளதாகவும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளர்.
மேலும், அவருடன் தொடர்புடைய 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.