புதுமைகளை அறிமுகம் செய்வதில் முதல் மாநிலம்.. ஜனாதிபதி புகழாரம்..!

புதுமைகளை அறிமுகம் செய்வதில் முதல் மாநிலம்.. ஜனாதிபதி புகழாரம்..!

Update: 2022-06-14 16:44 GMT

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2 நாள் சுற்றுப்பயணமாக கர்நாடகா வந்தார். காலை 11 மணிக்கு தனி விமானம் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அவரை, கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் கவர்னர் மாளிகைக்கு வந்த ராம்நாத் கோவிந்த், மாலையில் பெங்களூருவில் உள்ள தேசிய ராணுவ பள்ளி பவள விழாவில் கலந்து கொண்டார். இதில் அவர் விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது;

“ஆன்மிகம், கலை, அறிவியல், கலை, கட்டிடக் கலையில் கர்நாடகா சிறந்து விளங்குகிறது. நவீன கல்வி, தொழில்நுட்பத்தில் கர்நாடகா முன்னணியில் உள்ளது. புதுமைகளை அறிமுகம் செய்வதில் நாட்டிலேயே முதல் மாநிலமாக கர்நாடகா இருக்கிறது.

புதுமைகளை அறிமுகம் செய்வதில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. கற்றல், தொழில்நுட்பத்தில் பெங்களூரு சர்வதேச அளவில் ஒப்பீடு செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு முதலீட்டாளர்கள் சிறு நிறுவனங்களுக்கு உதவி செய்யும் நகரங்களில் உலக அளவில் முதல் 5 இடங்களில் பெங்களூரு இடம் பெற்றுள்ளது.

கவர்னர் தாவர்சந்த் கெலாட் வழிகாட்டுதலில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் கர்நாடகம் இந்த சாதனைகளை படைத்துள்ளது. இதற்காக நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Similar News